சேட்டா அடுத்த 7ல நீங்க தான்னு துலீப் கோப்பைலயே சொல்லிட்டாரு.. சூரியகுமாரின் ஆதரவு பற்றி சாம்சன் பேட்டி

Sanju Samson 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் சதமடித்து 107 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இது போக கடைசியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியிலும் அவர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்திருந்தார்.

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியாவுக்காக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். 2015ஆம் ஆண்டு அறிமுகமான அவருக்கு 2021 வரை இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே போல 2022க்குப்பின் கடந்த இலங்கை டி20 தொடர் வரை கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் அசத்தலாக விளையாடவில்லை.

- Advertisement -

சாம்சன் கம்பேக்:

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த சஞ்சு சாம்சனுக்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் துவக்க வீரராக வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் தற்போது அடுத்தடுத்த சதங்கள் அடித்துள்ள சஞ்சு சாம்சன் தன்னுடைய தரத்தை நிரூபித்துள்ளார். இந்நிலையில் அடுத்த 7 போட்டிகளில் உங்களுக்கு துவக்க வீரராக வாய்ப்பு கொடுப்போம் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 2024 துலீப் கோப்பையிலேயே கேப்டன் சூரியகுமார் தம்மிடம் தெரிவித்ததாக சாம்சன் கூறியுள்ளார்.

அப்படி கேப்டன் தெளிவான ஆதரவு கொடுத்ததே தம்முடைய கம்பேக் ஆட்டத்திற்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “துலீப் கோப்பையில் 2வது போட்டியில் நான் விளையாடிய போது சூர்யா எதிரணியில் விளையாடினார். அந்தப் போட்டியின் போதே அடுத்த 7 போட்டிகளில் நீங்கள் விளையாட போகிறீர்கள் சேட்டா. அதுவும் துவக்க வீரராக விளையாடப் போகிறீர்கள் என்று சூரியகுமார் சொன்னார்”

- Advertisement -

கேப்டனின் ஆதரவு:

“எது நடந்தாலும் நான் உங்களுக்கு ஆதரவு கொடுப்பேன் என்றும் சூரியகுமார் தெரிவித்திருந்தார். அந்த வகையில் என்னுடைய கேரியரிலேயே முதல் முறையாக தொடர்ந்து 7 போட்டிகளில் விளையாடப் போகிறேன் என்ற தெளிவு ஆரம்பத்திலேயே எனக்கு கிடைத்தது. அதனால் அந்த வாய்ப்பில் ஏதாவது நாம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்”

இதையும் படிங்க: 148 ரன்ஸ்.. இந்தியா ஏ’வை காப்பாற்றிய ஜுரேல்.. ஆஸி தொடரில் வாய்ப்பளிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை

“அப்படி கேப்டன் உங்கள் மீது பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும் போது அது களத்தில் வெளிப்படும். அணி நிர்வாகமும் வங்கதேசத்துக்கு எதிராக 3, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 போட்டிகளில் நான் துவக்க வீரராக விளையாடுவேன் என்று சொன்னார்கள். அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். அந்த வாய்ப்பில் நான் அணியின் வெற்றிக்காக பங்காற்றினேன். அந்த வாய்ப்பில் கண்டிப்பாக நீங்கள் நாட்டுக்காக சதமடிக்கும் போது அது ஸ்பெஷல் உணர்வைக் கொடுக்கும். நாங்கள் உலக சாம்பியன். எனவே அது போல் நாங்கள் விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement