- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதெல்லாம் பழகிடுச்சு.. அவங்கள தவிர்த்து இந்திய அணியில் யாருக்குமே நிலையான இடமில்லை.. சாம்சன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 டி20 தொடரில் விளையாடுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி கான்பெரா நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்தப் போட்டியின் இடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினார். அப்போது உங்களுடைய ஓப்பனிங் இடம் பறிபோனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று தொகுப்பாளர் கேட்டார்.

2015இல் அறிமுகமான சாம்சனுக்கு 2021 வரை நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளில் அவரும் சிறப்பாக விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தன. இருப்பினும் 2022க்குப்பின் ஓரளவு சிறப்பாக விளையாடத் துவங்கிய அவரை புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் ஓப்பனிங்கில் களமிறக்கினார்.

- Advertisement -

பறிபோன ஓப்பனிங்:

அந்த வாய்ப்பில் 12 இன்னிங்ஸில் 436 ரன்கள் அடித்த சாம்சன் 3 சதங்களை அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி அபாரமாக விளையாடினார். அப்போது 2025 ஆசியக் கோப்பையில் திடீரென சுப்மன் கில்லை தேர்வுக்குழு துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்தது. அதனால் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அது பற்றி சாம்சன் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் வெவ்வேறு அணிகளுக்காக வெவ்வேறு இடங்களில் விளையாடியுள்ளேன். இந்திய அணியின் அங்கமாக நீண்ட காலமாக இருந்து வரும் நான் வெவ்வேறு இடங்களில் விளையாடியுள்ளேன். ஓப்பனிங் விளையாடியுள்ள நான் போட்டிகளை முடிக்கவும் செய்துள்ளேன். தற்போது நான் மிடில் ஆர்டரில் விளையாடுகிறேன்”

- Advertisement -

யாருமே நிலையில்லை:

“இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மட்டுமே நிலையானவர்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் எப்போது வேண்டுமானாலும் பேட்டிங் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நாங்களும் அதற்கு தயாராக இருக்கிறோம். 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் நடைபெற உள்ள தொடர்களின் முக்கியத்துவம் பற்றி நேற்று நடைபெற்ற மீட்டிங்கில் நாங்கள் பேசினோம்”

இதையும் படிங்க: இந்த 2 நம்ப முடியாத சாதனைக்காவே சச்சினை விட ரோஹித் பெஸ்ட்.. டாப் ஒன்டே 5 இந்தியர்களை வெளியிட்ட மெக்ராத்

“அவை அனைத்தும் ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனத்தை செலுத்துவதை பற்றியதாகும். நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எங்களை அழுத்தத்திற்குள் போட்டுள்ளோம். இங்குள்ள சூழ்நிலைகளில் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அதுவே உடலளவிலும் மனதளவிலும் எங்களை சோதிக்க தேவையானதாகும். நாங்கள் இந்தத் தொடரில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -