இந்த 2 நம்ப முடியாத சாதனைக்காவே சச்சினை விட ரோஹித் பெஸ்ட்.. டாப் ஒன்டே 5 இந்தியர்களை வெளியிட்ட மெக்ராத்

Glenn McGrath
- Advertisement -

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 1983, 2011 ஆகிய வருடங்களில் உலக சாம்பியனாக சாதனை படைத்தது. கடந்த பல வருடங்களில் இந்தியா கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக், யுவ்ராஜ் சிங், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தரமான வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் தனது டாப் 5 சிறந்த வீரர்களை ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளன் மெக்ராத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அந்தப் பட்டியலில் முதல் வீரராக அவர் விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் 14000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் சச்சினையே முந்திய கோலி 765 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

நம்ப முடியாத ரோஹித்:

அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா அதிகபட்ச ஸ்கோர் (264) பதிவு செய்த வீரராகவும் திகழ்கிறார். அந்த 2 நம்ப முடியாத உலக சாதனைகளைப் படைத்த காரணத்தால் அவரை சச்சின் டெண்டுல்கருக்கு மேலே 2வது இடத்தில் மெக்ராத் தேர்ந்தெடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“என்னுடைய நம்பர் 2 ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய புள்ளிவிவரங்கள் மற்றும் விளையாடிய விதம் நம்ப முடியாதது. 3 இரட்டை சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் 264 என்பது கேள்விப்படாதது, நம்ப முடியாதது. 276 போட்டிகளில் 11000+ ரன்கள் அடித்துள்ள அவர் துரதஷ்டவசமாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஸ்பெசலிஸ்ட் என்று குறிப்பிடப்படுகிறார்”

- Advertisement -

மெக்ராத் டாப் 5:

“டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருடைய புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ரோஹித் கிளாஸ் பிளேயர். அவரை நான் 2வது இடத்தில் போடுவேன். நம்பர் ஒன் இடத்தில் விராட் கோலி தாண்டி உங்களால் செல்வது கடினம். அவர் அடித்துள்ள ரன்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட் ஆகியவை நம்ப முடியாதது. அதை நாம் சிட்னியில் பார்த்தோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 9.4 ஓவரில் 97 ரன்ஸ்.. மழையால் முடிந்த முதல் டி20யில் இந்தியா அசத்தல்.. ரோஹித்துக்கு பின் சூரியகுமார் சாதனை

அந்தப் பட்டியலில் 3வதாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார். அடுத்ததாக 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்று விக்கெட் கீப்பராக அதிக ஸ்டம்பிங் செய்து 10,000+ ரன்கள் அடித்துள்ள தோனி 4வதாக இடம் பிடித்துள்ளார். மெக்ராத் ஆல் டைம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 5வதாக 2011 உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement