நிறைய தோல்வியை பாத்துட்டேன்.. அந்த 2 பேர் கொடுத்த ஐடியாவை செஞ்சதே கம்பேக்கிற்கு காரணம்.. சாம்சன் பேட்டி

Sanju Samson
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்பன் நகரில் நவம்பர் எட்டாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 202-8 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் சதமடித்து 107 ரன்கள் குவித்து சாதனைகளை படைத்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா சுமாராக விளையாடி 17.5 ஓவரில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 23, க்ளாஸென் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

சாம்சன் அசத்தல்:

அதனால் அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக 2015ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் 2021 வரை நிலையான வாய்ப்புகளைப் பெறவில்லை. அதே சமயம் கடந்த இலங்கை டி20 தொடர் வரை கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் தொடர்ச்சியாக அசத்தவில்லை. இருப்பினும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் துவக்க வீரராக வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரராக சஞ்சு சாம்சன் மாபெரும் சாதனை படைத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கேரியரில் நான் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். உண்மையில் வெற்றிகளை விட நான் அதிக தோல்விகளை சந்தித்துள்ளேன். அந்த பயத்துடன் நீங்கள் செல்லும் போது உங்கள் மீது சந்தேகம் ஏற்படும்”

- Advertisement -

கம்பேக் ரகசியம்:

“சமூக வலைதளங்களில் மக்கள் பேசும் பேச்சுக்கள் கிண்டல்களும் வேலை செய்யும். ஆனால் நீங்கள் உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அசத்தும் உங்களால் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்த முடியவில்லை? என்று யோசித்தேன். ஆனால் என்னுடைய அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றால் களத்தில் நான் நேரத்தை செலவிட்டால் சுழல், வேகத்துக்கு எதிராக ஷாட்டுகளை அடிக்க முடியும். எனவே மேடு பள்ளங்கள் இருந்தாலும் அணியின் வெற்றியில் பங்காற்ற முடியும் என்பது எனக்கு தெரியும்”

இதையும் படிங்க: இந்த வருஷம் முழுக்க ஒரே ஒரு தோல்வி மட்டும் தான்.. இதுவரை எந்த அணியும் படைக்காத சாதனை – விவரம் இதோ

“சூரியகுமார், கௌதம் பாய், லக்ஷ்மன் சார் ஆகியோர் தோல்விகளிலும் ஆதரவு கொடுத்தனர். நீங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக முன்னேற வேண்டும் என்று சூர்யா மற்றும் கௌதம் பாய் சொன்னார்கள். அதனால் கேரளாவில் ஸ்பின்னர்களை கடினமான பிட்ச்சில் எதிர்கொண்டு பயிற்சிகளை எடுக்குமாறு அவர்கள் ஆலோசனை கூறினார்கள். அப்படி இந்திய கேப்டனே ஆலோசனை உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது போன்ற சிறிய விஷயங்களும் பெரிய உதவிகள் செய்கின்றன” என்று கூறினார்.

Advertisement