இந்த வருஷம் முழுக்க ஒரே ஒரு தோல்வி மட்டும் தான்.. இதுவரை எந்த அணியும் படைக்காத சாதனை – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது டி20 வடிவ போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த ஆண்டு முழுவதும் வெளிப்படுத்தி வந்து மாபெரும் சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்திய அணியின் இந்த சாதனைக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

மாபெரும் சாதனையை நிகழ்த்திய இந்திய அணி :

அந்த வகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அதற்கடுத்து 2024 டி20 உலக கோப்பை தொடரின் 8 போட்டிகளில் விளையாடி அந்த எட்டு போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

- Advertisement -

இப்படி தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணியின் பயணம் அடுத்த பாதியிலும் தற்போது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் டி20 உலககோப்பைக்கு அடுத்து நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி மற்ற நான்கிலும் வெற்றி பெற்று அசத்தியது.

அதனை தொடர்ந்து அண்மையில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரை முழுவதுமாக வென்ற இந்திய அணி 6 வெற்றிகளை குவித்தது. இப்படி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் கொண்டு அங்கு நடைபெற்ற வரும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற வேளையில் அந்த போட்டியிலும் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த ஆண்டு மட்டும் தாங்கள் விளையாடிய 23 போட்டிகளில் 22 வெற்றிகளுடன் 95.6 சதவீத வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஒரு அணி பெற்ற அதிக வெற்றி சதவீதமாக இந்த சாதனை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : ருதுராஜை முந்தி, ரோஹித்துக்கு சமமாக.. சஞ்சு சாம்சன் வேறு எந்த கீப்பரும் செய்யாத உலக சாதனை

இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் உகாண்டா அணி 29 வெற்றிகளை பெற்றாலும் அந்த அணியின் வெற்றி சதவீதம் 87.98 மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணி 95.6 சதவீத சராசரியுடன் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இன்னும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் அந்த நான்கு போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அசைக்க முடியாத சாதனையை நிகழ்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement