ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் கேரளாவை சேர்ந்த வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டதை பலரும் வரவேற்றனர். ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவருக்கு 4 வருடங்கள் கழித்து 2019இல் தான் இரண்டாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் 2021 வரை அவருக்கு எப்போதுமே நிலையான வாய்ப்புகள் கிடைத்ததில்லை.
இருப்பினும் மனம் தளராத அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடினார். அதனால் 2022, 2023 ஆகிய வருடங்களில் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு அசத்திய அவருக்கு 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பை அணிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்ததை மறக்க முடியாது.
10 வருடங்கள்:
அந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக சதமடித்த சஞ்சு சாம்சன் 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக தற்போது முதல் முறையாக உலகக் கோப்பை அணியில் அவர் போராடி தேர்வாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக தொடர்ச்சியான வாய்ப்பை பெறாத தாம் நிறைய தோல்விகளை சந்தித்ததாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் தமக்கு அனுபவமும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இது உலகக் கோப்பைக்கு மிகவும் தயாரான அல்லது அனுபவமிக்க சஞ்சு சாம்சன் ஆவார். கடந்த 10 வருடங்களில் நிறைய தோல்விகளை சந்தித்த எனக்கு அங்கேயும் இங்கேயும் குறைந்த வெற்றிகளை கிடைத்தன”
“இந்த முக்கியமான தொடரில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை எனக்கு வாழ்க்கையும் கிரிக்கெட்டும் கற்பித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மனதளவில் நிறைய இடைவெளியும் சிந்திப்பதற்கான விஷயங்களும் கிடைத்தன. ஒரு அணியின் கேப்டனாக இருந்ததால் அதில் என்னுடைய மனது நிரம்பியது. அதே சமயம் உலகக் கோப்பை தேர்வு பற்றியும் சிந்தித்தேன். ஏனெனில் அதுவும் மிகவும் பெரியது”
இதையும் படிங்க: சிராஜ், துபேவுக்கு இடமில்லை.. தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியின் பிளேயிங் லெவனை வெளியிட்ட ஸ்ரீசாந்த்
“ஐபிஎல் தொடர் எனக்கு நன்றாக அமைந்தது என்னுடைய கேரியரில் நடைபெற்ற சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். அதே சமயம் அது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். அது அணி நிர்வாகம் என்ன விரும்புகிறது என்பதைப் பொறுத்தது. என் வாழ்க்கையும் கிரிக்கெட்டும் உனக்கு திருப்பிக் கொடுக்க தயாராகி விட்டது என்பதை நான் உணர்ந்துள்ளேன். அப்படித்தான் இதை பார்க்கிறேன். இது மற்றுமொரு மகத்தான தருணம்” என்று கூறினார்.



