சிராஜ், துபேவுக்கு இடமில்லை.. தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியின் பிளேயிங் லெவனை வெளியிட்ட ஸ்ரீசாந்த்

Sreesanth
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் களமிறங்கியுள்ளது. அந்த பயணத்தில் பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் நகரில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

அந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக பயிற்சிப் போட்டியில் அசத்திய ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரில் துவக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது. இந்த நிலையில் அயர்லாந்து போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை சில முன்னாள் வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் லெவன்:
அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆனால் மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காக தேர்வான சிவம் துபேவை கழற்றி விட்டுள்ள அவர் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோரை மட்டுமே ஆல் ரவுண்டர்களாக தேர்வு செய்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓபனிங் களமிறங்க வேண்டும். விராட் கோலி 3வது இடத்திலும் சூரியகுமார் யாதவ் 4வது இடத்திலும் விளையாட வேண்டும். ரிஷப் பண்ட் 5வது இடத்தில் களமிறங்க வேண்டும்”

- Advertisement -

“6 மற்றும் 7வது இடங்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருப்பார்கள். அதைத் தொடர்ந்து பவுலர்கள்” என்று கூறினார். அந்த வகையில் தம்முடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை கழற்றி விட்டுள்ள அவர் குல்தீப் யாதவ் – சஹால் ஆகிய சுழல் பந்து வீச்சு ஜோடியை ஒன்றாக தேர்வு செய்துள்ளார். அதனால் பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ள அவர் சிராஜை கழற்றி விட்டுள்ளார்.

இதையும் படிங்க: தயவுசெய்து தவறான விடயங்களை பரப்பாதீங்க.. சி.எஸ்.கே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட – நிதீஷ் ரெட்டி

ஸ்ரீசாந்த் தேர்வு செய்த இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் ஃபண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்

Advertisement