
கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். 2021 வரை சீனியர்கள் இருந்ததால் அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளிலும் சாம்சன் தடுமாற்றமாகவே விளையாடினார். இருப்பினும் 2023ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்திய அவர் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே விளையாடி வந்தார்.
அந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக வந்ததும் அவரை டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அறிமுகப்படுத்தினார். அந்த வாய்ப்பிலும் இலங்கைத் தொடரில் சாம்சன் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அதனால் இனியும் எவ்வளவு வாய்ப்புகள் கொடுப்பது? இவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று ஆதரவளித்த ரசிகர்களே சாம்சனை விமர்சித்தார்கள்.
இருப்பினும் அதற்காக அசராத சாம்சன் அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் சதத்தை அடித்து அசத்தினார். அதோடு நிற்காத அவர் தென்னாப்பிரிக்க மண்ணிலும் சதத்தை அடித்து மிரட்டினார். மொத்தத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாய்ப்பைப் பெற்றதும் 3 சதங்கள் அடித்துள்ள சாம்சன் ஒரு வழியாக சிறப்பாக விளையாடத் துவங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் 21 போட்டிகளில் டக் அவுட்டாகாத வரை உனக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பேன் என்று கௌதம் கம்பீர் கொடுத்த வாக்குறுதியே தம்முடைய சிறந்த செயல்பாடுகளுக்கு காரணம் என்று சாம்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2024 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் அனைத்தும் திடீரென மாறியது”
“கௌதம் பாய் பயிற்சியாளராகவும் சூர்யகுமார் கேப்டனாகவும் வந்தார்கள். அந்த சமயத்தில் ஆந்திராவில் நான் துலீப் கோப்பை போட்டியில் விளையாடிய போது சூர்யா எதிரணியில் இருந்தார். அப்போது உங்களுக்கு அடுத்ததாக நடைபெறும் 7 போட்டிகளில் துவக்க வீரராக வாய்ப்பளிக்க உள்ளோம் என்று சூர்யா என்னிடம் சொன்னார். அந்த வார்த்தைகள் கேப்டனின் வாயிலிருந்து வந்ததால் நான் வாவ் என்ற வகையில் ஆச்சரியப்பட்டேன்”
இதையும் படிங்க: இந்தியாவின் தைரியமான பிளான் ஒர்க் ஆகிடுச்சு.. பும்ரா அருமை தெரியாம விமர்சிக்காதீங்க.. வாசிம் அக்ரம்
“அந்த வாய்ப்பில் இலங்கை மண்ணில் என்னால் 2 போட்டிகளில் ரன்கள் அடிக்க முடியவில்லை. அப்போது கம்பீர் என்னிடம் வந்து என்னவாயிற்று? என்று கேட்டார். அவரிடம் “நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்றும் என்னால் அதைப் பயன்படுத்த முடியவில்லை” என்று ஏமாற்றத்துடன் சொன்னேன். அதற்கு “அதனால் என்ன? நீ 22 டக் அவுட்டானால் மட்டுமே நீக்குவேன்” என்று கம்பீர் என்னிடம் சொன்னார். அப்படி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் காட்டிய ஆதரவு என்னுடைய தன்னம்பிக்கையை உயர்த்தியது. அது எனக்கு களத்திற்கு சென்று சிறப்பாக செயல்பட உதவியது” என்று கூறினார்