இந்தியாவின் தைரியமான பிளான் ஒர்க் ஆகிடுச்சு.. பும்ரா அருமை தெரியாம விமர்சிக்காதீங்க.. வாசிம் அக்ரம்

Wasim Akram 2
- Advertisement -

இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சொல்லப்போனால் அத்தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்ற அவர் அதிக விக்கெட்டுகளை (23) எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்தியாவின் திட்டம்:

ஆச்சரியப்படும் வகையில் அவர் விளையாடியப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. அதன் காரணமாக இந்திய அணிக்காக முழுமையாக விளையாடாமல் வெளியேறிய ஜஸ்ப்ரித் பும்ராவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவை 2 போட்டிகளில் ஓய்வெடுக்க வைத்த இந்தியாவின் முடிவு கச்சிதமாக வேலை செய்ததாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக பும்ரா இல்லாததால் இங்கிலாந்து அணியினர் மற்ற பவுலர்களை எளிதாக நினைத்து எதிர்கொண்டது இந்தியாவின் வெற்றிக்கு உதவியதாக அவர் கூறியுள்ளார். அடுத்ததாக 2025 ஆசிய கோப்பை, 2026 டி20 உலகக் கோப்பையில் பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு அவசியம் என்று அவர் கூறியுள்ளார். எனவே அவருடைய அருமையை உணர்ந்து இந்திய அணி இப்போதே ஓய்வு கொடுத்தது சரியான முடிவு என்றும் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜாம்பவான் பாராட்டு:

அது தெரியாமல் விமர்சிப்பவர்கள் பற்றி வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “பொதுவாக தைரியமான அணியால் மட்டுமே தங்களுடைய சிறந்த பவுலரை ஓய்வெடுக்க வைக்க முடியும். ஆனால் இந்திய அணியிடம் பெஞ்சில் வலுவான வீரர்கள் உள்ளார்கள். அதை நம்பி அவர்கள் வகுத்த திட்டம் கச்சிதமாக வேலை செய்துள்ளது”

இதையும் படிங்க: அதுக்கு அப்றமும் இந்தியாவை ஜெய்க்க வெச்ச சிராஜ்.. இனிமேலும் துணை பவுலர் கிடையாது.. வாசிம் அக்ரம்

“அடுத்ததாக 2025 ஆசிய கோப்பை, 2026 டி20 உலகக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்கள் வருகிறது. ஜஸ்ப்ரித் பும்ரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் மிகவும் முக்கியமானவர். எனவே அவரை சரியாக நிர்வகிப்பது வெற்றிக்கான சாவியாக இருக்கலாம்” என்று கூறினார். மொத்தத்தில் 2 போட்டிகளில் விளையாடாததால் இத்தனை நாட்களாக பும்ரா வெளிப்படுத்திய அபாரமான செயல்பாடுகளை மறந்து அவரை சிலர் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement