இன்னும் 83 ரன்கள் போதும்.. 12 ஆவது இந்திய வீரராக சஞ்சு சாம்சன் நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ

Sanju Samson
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த பல தொடர்களாகவே இந்திய டி20 அணியின் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக அடுத்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக அவரே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்மையில் புதிய டெஸ்ட் கேப்டன் பதவியினை பெற்ற சுப்மன் கில் மீண்டும் டி20 வடிவ போட்டிகளுக்கு துணை கேப்டனாக கம்பேக் கொடுத்துள்ளதால் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அவரே துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

சஞ்சு சாம்சன் நிகழ்த்தவிருக்கும் சாதனை :

இதன் காரணமாக துவக்க வீரருக்கான வாய்ப்பினை இழந்த சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சனுக்கு ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது வரிசையில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து தனது பார்மை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆதரவும் அவருக்கு குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12-வது இந்திய வீரராக ஒரு அற்புதமான சாதனையை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

- Advertisement -

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை 45 போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 3 அரைசதம் என 917 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக மேலும் அவர் 83 ரன்களை அவர் குவிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்வார்.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டையும் எடுக்கனும்னா அவரை அணியில் சேருங்க – அணில் கும்ப்ளே ஆதரவு

அப்படி அவர் 1000 ரன்களை அடித்தால் இந்திய அணி சார்பாக 12-ஆவது வீரராக சர்வதேச டி20 போட்டியில் 1000 ரன்களை கடந்த வீரராக தனது பெயரையும் பதிவு செய்வார். ஒருவேளை இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரால் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்றாலும் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடருக்குள் அவரால் இந்த சாதனையை பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement