ஐ.பி.எல் தொடரில் நான் கண்டு பயப்படும் பந்துவீச்சாளர் என்றால் அது இவர்தான் – சாம்சன் வெளிப்படை

samson
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இளம் வயதில் அறிமுகமான இவரது திறமை காரணமாக குறுகிய நாளில் பெரிய வீரராக உருவெடுத்தார். இருப்பினும் அவர் இந்திய அணிக்கு விளையாடும் காலம் சிறிது நீண்ட காலத்திற்கு பிறகே அமைந்தது. 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் மீண்டும் 2020 ஆம் ஆண்டு அதாவது ஐந்து ஆண்டுகள் கழித்தே இந்திய t20 அணியில் இடம்பிடித்து ஒரு போட்டியில் விளையாடினார்.

Samson

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிரந்தர இடம் கிடைக்காமல் இவர் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இவருக்கும் ஒரு இடம் உண்டு.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் எளிதாக ஆடுவது போன்று சர்வதேச போட்டிகளில் விளையாட முடியவில்லை என்ற குறையும் அவரது பேரில் உண்டு. இருப்பினும் இனி வருங்காலத்தில் அந்த குறையை போக்கி நிச்சயம் சிறந்த வீரராக மாறுவார் என்ற நம்பிக்கை அவர்மீது தேர்வாளர்களுக்கு அதிகமாகவே உள்ளது.

Samson

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் முன்னணி பந்து வீச்சாளர்களை சிதறடிக்கும் அவர் தான் கண்டு பயந்த பந்து வீச்சாளர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம். அவரது பந்தை நான் சிறப்பாக எதிர்கொண்டாலும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் தான்.

kuldeep

ஏனெனில் அவர் பந்து எந்த திசையில் சுழலும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். அதனாலேயே பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சை கண்டு புலம்புவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும் என்று தெரிவித்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கிய சம்சோன் அரைசதம் அடித்து மிக குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement