காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக 2 ஆவது போட்டியில் விளையாடப்போவது – யார் தெரியுமா?

Ruturaj-Gaikwad
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்ளின் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியை இந்திய அணி கைப்பற்றி உள்ளதால் இந்த இரண்டாவது போட்டியிலும் அயர்லாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது.

IND vs IRE

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியுடன் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து எப்படியாவது இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்து தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அயர்லாந்து அணி தயாராகி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

இந்நிலையில் இந்த டி20 தொடரின் முதலாவது போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக பேட்டிங்கில் களமிறங்காத ருதுராஜ் கெய்க்வாட் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அப்படி இரண்டாவது போட்டியில் அவர் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் விளையாடப்போவாது யார் என்பதே அனைவரது கேள்வியாகும் உள்ளது.

Samson

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக நாளைய 2 ஆவது போட்டியில் களம் இறங்கப் போகும் வீரர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே முதல் போட்டியில் தீபக் ஹூடா துவக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நாளைய போட்டியிலும் அவரே இஷான் கிஷனுடன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே வேளையில் இந்த 2 ஆனது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் நாளைய போட்டியில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடுவார் என்று கூறப்படுகிறது. எனவே ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதில் நிச்சயம் சஞ்சு சாம்சன் தான் அணியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : INDvsIRE : 201 கி.மீ வேகத்தில் பந்துவீசினாரா? புவனேஷ்வர் குமார் – இணையத்தில் வைரலாகும் போட்டா (உண்மையா?)

டி20 இந்திய அணியில் 2015-ஆம் ஆண்டே அறிமுகம் ஆகியிருந்தாலும் நிரந்தர வாய்ப்பு இன்றி தவித்து வரும் சஞ்சு சாம்சன் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தாலும் முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் ஐ.பி.எல் தொடரில் கலக்கிய ராகுல் திரிப்பாதியும் அறிமுக வாய்ப்பிற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement