ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டியில் கோலியின் இடத்தில் களமிறங்கப்போவது யார்? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று துவங்க இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜனவரி 11-ஆம் தேதியான இன்று மொஹாலி நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இருஅணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய விராட் கோலி முதலாவது போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக முதல் போட்டியில் விராட் கோலியின் இடத்தை நிரப்பப்போகும் அந்த வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் நிலைத்து நின்று ஆடக்கூடிய மூன்றாவது இடத்தில் கோலிக்கு பதிலாக விளையாடப்போகும் அந்த நபர் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இந்த முதலாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் தான் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் மூன்றாவது இடத்திலேயே விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் போட்டியின் ஆரம்பத்தில் நல்ல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதனாலும் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் விளையாடினால் ஜிதேஷ் சர்மாவை பின்வரிசையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் சேர்க்க முடியும் என்பதால் சஞ்சு சாம்சனை ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியின் இடத்தில் விளையாட வைக்கலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக விராட் கோலி படைக்கவிருக்கும் சாதனை – விவரம் இதோ

அதேவேளையில் பின்வரிசையில் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் பினிஷராக விளையாடுவார்கள் என்பதனால் இன்றைய முதலாவது போட்டியில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் சஞ்சு சாம்சன் தான் விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement