சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கு தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நாளை விளையாட இருக்கிறது.
சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு :
அந்த வகையில் இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டியானது பிப்ரவரி 12-ஆம் தேதியான நாளை டெல்லி நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் நாளைய இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா விளையாட மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரால் இந்த இரண்டாவது லீக் போட்டியில் விளையாட முடியாது என்றும் மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அவர் அணிக்கு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாக அபிஷேக் சர்மா விளையாட முடியாத போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மீண்டும் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.
இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் மிகப்பெரிய ஆட்டம்.. அதுல ஜெயிக்கப்போவது இவங்கதான் – சவுரவ் கங்குலி கருத்து
ஏற்கனவே கடைசி சில போட்டிகளில் தனது பார்மை இழந்த சாம்சனுக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட வேளையில் தற்போது அபிஷேக் சர்மாவின் காய்ச்சலால் மீண்டும் ஒருமுறை துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



