சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் லீக் சுற்று போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது.
இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெல்லப்போவது யார்? : சவுரவ் கங்குலி
அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நமீபியா அணிக்கு எதிராக விளையாடயிருக்கிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது நாளை பிப்ரவரி 12-ஆம் தேதி டெல்லி நகரில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கு அடுத்து இந்த டி20 உலக கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய ஆட்டமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இருக்கும்.
இதையும் படிங்க : அண்டர் 19 உலககோப்பையை வென்ற கேப்டன் ஆயுஷ் மாத்ரேவுக்கு சச்சின் கொடுத்த – விலை மதிப்பில்லாத பரிசு
அதே வேளையில் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவை வீழ்த்துவது என்பது எளிதாக இருக்காது. ஏனெனில் தற்போதைய இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. சில ஆண்டுகளாகவே இரு தரப்பு மோதலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகளவில் இருந்து வரும் வேளையில் இந்த போட்டியிலும் இந்திய அணியே வெல்லும் என்று தான் நம்புவதாக சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.



