- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இஷான் கிஷன் சதமடித்து இருந்தாலும் சஞ்சு சாம்சனுக்கு தான் அந்த வாய்ப்பு போகுமாம் – வெளியான தகவல்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் :

இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னதாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவே தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு துலீப் டிராபி தொடரில் அசத்திய சில வீரர்களுக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளதால் சுப்மன் கில், ரிஷப் பண்ட், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் இந்த டி20 தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதன் காரணமாக ஒருவேளை வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு ஓய்வு வழங்கப்பட்டால் அவருக்கு பதிலாக எந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இஷான் கிஷன் தற்போது துலீப் டிராபி தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரின் மூன்றாவது சுற்று போட்டிகளின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான சதம் அடித்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் 101 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 3 சிக்ஸ் 12 பவுண்டரி என 106 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : 177 ரன்ஸ்.. பிறந்தநாளில் ரஷித் கான் உலக சாதனை.. தெ.ஆ அணியை பந்தாடி வரலாறு காணாத வெற்றி

அதன் மூலம் மீண்டும் தனது பார்மை நிரூபித்துள்ள சஞ்சு சாம்சனுக்கே அஜித் அகார்கர் முன்னுரிமை வழங்குவார் என்றும் அதன் காரணமாக இஷான் கிஷனுக்கு மறுபடியும் மறுக்கப்படும் என்றும் தெரிகிறது.

- Advertisement -