2026 ஐ.பி.எல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சன் கலந்து கொண்டால் எவ்வளவு தொகைக்கு செல்வார்? – ஓர் அலசல் இதோ

Sanju Samson
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதினால் அவர் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் மினி ஏலத்திற்காக தனது பெயரினை அவர் பதிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் நட்சத்திர வீரரான அவரை மினி ஏலத்திற்கு முன்பாகவே டிரேடிங் முறையில் தங்களது அணிகளுக்கு கொண்டுவர பல்வேறு அணிகளும் முனைப்பு காட்டும் என்று கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சனின் ஏலத்தொகை ஓர் அலசல் :

ஏற்கனவே அந்த வகையில் சென்னை அணி சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியிருந்த வேளையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் அதனை மறுத்தது. அதேபோன்று கொல்கத்தா அணியின் நிர்வாகமும் சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அது குறித்து வெளியாகவில்லை.

- Advertisement -

அதேபோன்று சஞ்சு சாம்சனும் டிரேடிங் முறையில் தான் எந்த அணிக்கும் செல்ல இருப்பதாக இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறுவார் என்று அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அவர் எவ்வளவு கோடிகளுக்கு விலை போவார்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 177 போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 26 அரைசதம் என 4704 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை மிகப்பெரிய அனுபவம் கொண்ட அவர் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் திகழ்வதால் அவருடைய ஏலத்தின் மதிப்பு நிச்சயம் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடிக்கும், இஷான் கிஷன் 11.25 கோடிக்கும், கே.எல் ராகுல் 14 கோடிக்கும் சென்றிருந்தனர்.

அதேவேளையில் ராஜஸ்தான் அணியால் சஞ்சு சாம்சன் 18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் கலந்து கொண்டால் குறைந்தது 10-15 கோடி வரை செல்வது உறுதி என்றும் அவரை வாங்க பல்வேறு அணிகளின் மத்தியிலும் போட்டி நிலவும் என்பதால் கூடுதலாக 5 கோடி வரை செல்லலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரொம்ப சீக்கிரம் ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.. அவர் செம டேலன்ட் – முன்னாள் இலங்கை வீரர் ஆதரவு

அதன் காரணமாக நிச்சயம் சஞ்சு சாம்சன் 15 முதல் 20 கோடி வரை செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி கேப்டன்சி அனுபவத்தையும் பெற்றுள்ளதால் அவரை ஏலத்தில் வாங்க பலத்த போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement