இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக தனது இடத்தை உறுதிசெய்து விட்டார். ஆனாலும் அவருக்கு இந்தியாவில் இம்மாதம் துவங்க உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தேர்வாளர்களுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன் :
ஏனெனில் முதன்மை விக்கெட் கீப்பராக ஒருநாள் போட்டிகளில் கே.எல் ராகுல் விளையாடி வரும் வேளையில் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக திறமை வாய்ந்த சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது பலரது மத்தயிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை ரிஷப் பண்டின் செயல்பாடு பெரிய அளவில் திருப்திகரமாக இருந்ததில்லை. அதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கே அந்த வாய்ப்பை வழங்கிருக்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தன்னை தேர்வு செய்யாததற்கு பிறகு அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடிய வரும் சஞ்சு சாம்சன் கேரளா அணிக்காக ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அந்த வகையில் ஜார்கண்ட் அணி நிர்ணயித்த 312 ரன்கள் என்கிற இலக்கினை துரத்துகையில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சஞ்சு சாம்சன் 11 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டர் என 124 ரன்கள் குவித்து மிரட்டலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : அவங்க இப்படி பண்ணா என்னால என்ன பண்ண முடியும்.. கே.கே.ஆர் அணி நீக்கத்திற்கு பிறகு – வங்கதேச வீரர் வருத்தம்
துவக்க வீரராக களமிறங்கி மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை விளையாடும் அவரை இனியாவது ஒருநாள் போட்டிகளுக்கான பேக்கப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 56 ரன்கள் சராசரியுடன், 99 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 510 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



