அவங்க இப்படி பண்ணா என்னால என்ன பண்ண முடியும்.. கே.கே.ஆர் அணி நீக்கத்திற்கு பிறகு – வங்கதேச வீரர் வருத்தம்

Mustafizur Rahman
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது அபுதாபியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்ற 10 அணியின் நிர்வாகங்களும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து தங்களது அணியை மேலும் வலுப்படுத்திக் கொண்டனர். அதன் காரணமாக இந்த மினி ஏலமானது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

கே.கே.ஆர் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து : முஸ்தபிசுர் ரஹ்மான் வருத்தம்

அந்த வகையில் இந்த ஆண்டு அதிக கையிருப்புடன் மினி ஏலத்தில் பங்கேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது குறிப்பிட்ட சில வீரர்களை எடுத்து தங்களது அணியை வலுப்படுத்தியிருந்தது. அந்த வகையில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானை 9.20 கோடி என்கிற பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வங்கதேச வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக கடுமையான எதிர்ப்புகள் எழும்பின. அதோடு நாடு முழுவதும் இந்த செய்தி வைரலாகி இருந்தன.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வங்கதேச வீரரான முஸ்தபிசூர் ரஹ்மானை வெளியேற்ற வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டது. பின்னர் பி.சி.சி.ஐ-யின் அந்த வேண்டுகோளுக்கு இணங்க கே.கே.ஆர் அணியும் தங்களது அணியிலிருந்து அவரை விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் கூறுகையில் : என்னை அணியில் இருந்து நிர்வாகம் விடுவித்து விட்டால் நான் வேறு என்ன செய்ய முடியும். அவர்களது முடிவுக்கு சில காரணங்கள் இருக்கலாம்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இருக்கும் வரை ருதுராஜ் கெய்க்வாடுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது – அஷ்வின் காட்டம்

கே.கே.ஆர் அணியின் நிர்வாகம் என்னை வெளியேற்றியதற்கு பின்னர் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை முஸ்தபிசுர் ரஹ்மான் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளை பொருத்தவரை 60 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement