டாஸ் போட்டு முடிந்ததும் சஞ்சு சாம்சன் செய்த செயல். அம்பயர் ஷாக் – நேற்றைய போட்டியில் இதை கவனிச்சீங்களா ?

rrvspbks
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், முதல்முறையாக கேப்டன் பதவி ஏற்றுள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது முதல் முறையாக டாஸ் போட வந்த சஞ்சு சாம்சன் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

rrvspbks

- Advertisement -

அதன்படி கடந்த ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் மோசமான ஆட்டம் காரணமாக வெளியேற்றப்பட்டதால் புது கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டார். பல வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் சாம்சன் மீது நம்பிக்கை வைத்து அவரது திறமைக்கு ஒரு வாய்ப்பாக தற்போது ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவருக்கு இந்த கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது.

தான் முதல் முதலாக கேப்டன் பொறுப்பேற்ற இந்த போட்டியில் டாஸ் போட வரும் பொழுது சாம்சன் காயினை சுண்டினார். பின்னர் டாசில் வெற்றி பெற்ற அவர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்வதாக கூறிவிட்டு தான் போட்ட அந்த டாஸ் காயினை எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். மேலும் தான் கேப்டனாக செயல்படும் முதல் போட்டி என்பதால் இந்த காயினை நினைவு பரிசாக எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இது மூன்றாவது அம்பயருக்கு சற்று சர்ப்ரைஸ் ஆகவே இருந்தது.

samson

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 20 ஓவரில் 221 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது பஞ்சாப் அணியின் சார்பாக கே எல் ராகுல் அதிக ரன்கள் குவித்தார். அதன்பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரை சிறப்பாக விளையாடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 119 ரன்களை குவித்தார்.

Samson-1

கேப்டனாக தான் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் செஞ்சுரி அடித்த அவர் கேப்டனாக முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஐபிஎல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களது இந்த சிறப்பான சேசிங் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement