போட்டியை ஜெயிச்சாலும் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் அபராதம் விதித்த நிர்வாகம் – காரணம் இதுதான்

Samson
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் முப்பத்தி இரண்டாவது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆனது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்களை குவித்தது.

rrvspbks

- Advertisement -

அதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது இரண்டாவது இன்னிங்சில் 20 ஓவர்கள் வீசி முடிக்க கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் முதல் தடவையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Tyagi 1

நேற்றைய போட்டியின் ஒருகட்டத்தில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் அடித்து இருந்த நிலையில் கடைசி இரு ஓவர்களில் போட்டியை மாற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் இந்த இரண்டாவது இன்னிங்சின் போது அவர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement