IND vs NZ : நீங்க சேக்கலனா என்ன? நாங்க சப்போர்ட் பண்ணுவோம் – நியூசிலாந்திலும் கெத்து காட்டும் சாம்சன் ரசிகர்கள்

Sanju
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியானது அதற்கு அடுத்து தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் அணியில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பல்வேறு குரல்கள் எழுந்த வேளையில் தற்போது இந்த நியூசிலாந்து தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சனும் இணைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி நடைபெற்று வரும் நியூசிலாந்து டி20 கிரிக்கெட் தொடரில் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் நேற்று மவுண்ட் மாங்கனி நகரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

இப்படி தொடர்ச்சியாக இந்திய அணியில் இப்படி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் வேளையில் சஞ்சு சாம்சன் உலகின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் அங்கு வந்து தங்களது ஆதரவினை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவையும் தாண்டி தற்போது நியூசிலாந்தில் சஞ்சு சாம்சனுக்கு கிடைத்துள்ள ரசிகர்களின் ஆதரவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் மௌன்ட் மாங்கனி நகரில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கு ஆதரவாக ரசிகர்களின் குரல் மைதானத்தின் ஒலித்தது.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் குறித்து 11 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ரோஹித் சர்மா – வைரலாகும் ட்வீட்

அதோடு பெவிலியன் அருகில் இருந்த ரசிகர்கள் சஞ்சு என்று அவரது பெயரை கையில் ஏந்தியவாறு அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டு மைதானத்தை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது. அது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement