தமிழக அணியில் இணைந்து விளையாட இருக்கும் கேரள வீரர் சஞ்சு சாம்சன்.. காரணம் இதுதான் – விவரம் இதோ

Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் ரோகித் சர்மா டி20 வடிவ போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய டி20 அணியின் துவக்க வீரராக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் 14 சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் வங்கதேச அணிக்கு எதிராக ஒரு சதம், தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக இரண்டு சதம் என மூன்று சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

தமிழக அணியில் விளையாட இருக்கும் சஞ்சு சாம்சன் :

இதன் காரணமாக அவருக்கு இந்திய ஒருநாள் அணியும் இடம் கிடைக்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அந்தத் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

இதற்கு மிக முக்கியமான காரணமாக அவருக்கு கேரள அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்மையில் சையத் முஷ்டாக் அலி தொடர் முடிவடைந்த கையோடு விஜய் ஹசாரே கோப்பை காண பயிற்சி முகாமில் சஞ்சு சாம்சன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேரள கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த சஞ்சு சாம்சன் அந்த தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக அவருக்கும் அம்மாநில கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள கிரிக்கெட் சங்கத்துடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தற்போது சஞ்சு சாம்சன் புதிய முடிவை கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்தவகையில் கேரளா அணியில் இருந்து விலகி அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பதால் அவர் உள்ளூர் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி நிச்சயமாக சாம்பியன்ஸ் டிராபியில் அந்த விடயத்தில் அசத்துவார் – சவுரவ் கங்குலி நம்பிக்கை

இருப்பினும் சஞ்சு சாம்சன் தமிழ்நாட்டின் அருகில் இருப்பதால் தமிழக அணியில் இணைந்து விளையாடவே வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கேரள வீரர் சந்தீப் வாரியர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் வேளையில் சஞ்சு சாம்சனும் இணைந்தால் அது தமிழ்நாடு அணிக்கு பலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement