கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இருந்து அரையிறுதி வரை எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்து 50 ஓவர் கிரிக்கெட்டின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
விராட் கோலி நிச்சயமாக அசத்துவார் :
அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது.
அதனை தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி காத்திருக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பேட்டிங்கில் நிச்சயமாக செயல்பட்டு ரன்களை குவிப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நாம் வாழ்க்கையில் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த வீரர் என்றால் அது கோலி தான்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மிகச் சிறப்பான வீரராக இதுவரை திகழ்ந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் என்பது சதங்களை அடித்திருக்கும் அவர் என்னை பொருத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பார்க்கிறேன். பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் அதன் பிறகு தடுமாறியதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆவது வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ஹார்டிக் பாண்டியா
ஆனாலும் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை பல ஆண்டு காலமாக நமக்கு காண்பித்து வருகிறார். எந்த ஒரு வீரருக்குமே பலவீனம் என்பது இருக்கும். ஆனால் அதனை திருத்திக் கொண்டு நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல உதவுவார் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.



