இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதன் மூலம் இரண்டாவது சர்வதேச வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் அற்புதமான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இரண்டாவது சர்வதேச வீரராக பாண்டியா நிகழ்த்த இருக்கும் சாதனை :
அந்த வகையில் ஷாகிப் அல் ஹசனுக்கு அடுத்து அவர் இந்த சாதனையை நிகழ்த்த இருப்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய டி20 அணியை பொறுத்தவரை ரோகித் சர்மாவிற்கு அடுத்து கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஹார்டிக் பாண்டியா.
ஆனால் ஒரு சில காரணங்களுக்காக கேப்டன் பதவியில் இருந்து நிராகரிக்கப்பட்ட அவர் கடந்த சில தொடர்களாகவே துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் அவரை தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அந்த பதவியில் இருந்தும் இந்திய அணி நீக்கி புதிய துணை கேப்டனாக அக்சர் பட்டேலை நியமித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் பாண்டியா 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் டி20 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நிகழ்த்துவார்.
அதுமட்டும் இன்றி இந்த தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 1500-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். டி20 போட்டிகளில் பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் 1500-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரராக வசாகிப் அல் ஹசன் மட்டுமே அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : அவருக்கு கிடைச்ச அந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகிட்டாரு.. சாம்சனை பாராட்டிய – சூரியகுமார் யாதவ்
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த தொடரில் ஹார்டிக் பாண்டியா மட்டும் 11 விக்கெடுகளை வீழ்த்தும் பட்சத்தில் சாகிப் அல் ஹசனுக்கு அடுத்ததாக 1500 மேற்பட்ட ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 போட்டிகளில் வீழ்த்திய இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



