
ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன் சில வீரர்களை டிரேடிங் முறையில் வாங்க பல்வேறு அணிகள் முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் விலக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.
அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது போக சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் வேண்டுமெனில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே ஆகியோரில் ஒருவரை கொடுக்க வேண்டுமென்று சிஎஸ்கே அணிக்கு ராஜஸ்தான் நிர்பந்தம் விதித்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்லும் டிரேட் டீல் நடக்க வாய்ப்பில்லை என்று ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் சாம்சனுக்காக சிஎஸ்கே அணி ஜடேஜா, துபே போன்ற தங்களுடைய முக்கிய வீரர்களை கழற்றி விட விரும்பாது என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் சேனலில் அஸ்வின் பேசியது பின்வருமாறு.
“சிஎஸ்கே – ராஜஸ்தான் ட்ரேட் ஏன் வேலை செய்யாது? ஏனெனில் ஒருவேளை சஞ்சு சிஎஸ்கே அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டால், அவருடைய இடத்தை நிரப்புவதற்காக ராஜஸ்தான் மற்ற அணிகளுடன் டிரேடிங் செய்ய வேண்டிய நிலைமை வரும். அது போன்ற சூழ்நிலையில் சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தானுக்கு மதிப்புமிக்க வீரர்கள் கிடைக்க மாட்டார்கள்”
“எடுத்துக்காட்டாக ரவி பிஸ்னோய் போன்ற ஸ்பின்னரை ராஜஸ்தான் வாங்குவதற்காக லக்னோவை அணுகுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது லக்னோ அணி பிஸ்னோயை கொடுத்து விட்டு சாம்சனை வாங்கினால், பின்னர் சாம்சனை தக்க வைப்பதற்கான பணத்தை லக்னோ நிர்வகிக்க வேண்டும். அது லக்னோ அணியின் பொறுப்பாகவும் இருக்கும். சிஎஸ்கே பெரும்பாலும் டிரேடிங் செய்வதை நம்பும் அணி கிடையாது”
இதையும் படிங்க: இந்திய பிளேயிங் லெவன்லேயே இல்லாத என்னை ஹைடன் ஸ்லெட்ஜ் பண்ணாரு.. 2004 பின்னணி பற்றி ஆகாஷ் சோப்ரா
“அவர்கள் சிவம் துபே அல்லது ரவீந்திர ஜடேஜா போன்றவர்களைக் கொடுக்க விரும்ப மாட்டார்கள். எனவே நான் விளக்கிய காரணங்களுக்காக சிஎஸ்கே அணிக்கு சாம்சன் டிரேடிங் செய்யப்படுவது இருண்டு போயுள்ளது. அது போன்ற ட்ரேடிங் செய்வதால் ராஜஸ்தான் அணிக்கு எந்த பலனும் கிடைக்காது” என்று கூறினார்