இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நவம்பர் 10 தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தென்னாபிரிக்காவின் கிபர்ஹா நகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கடந்த போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே டக் அவுட்டானார். இதையும் சேர்த்து இந்த வருடம் மட்டும் அவர் டி20 கிரிக்கெட்டில் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
மோசமான சாதனை:
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சஞ்சு சாம்சன்: 4 (2024*)
2. யூசுப் பதான்: 3 (2009)
3. ரோஹித் சர்மா: 3 (2018)
4. ரோஹித் சர்மா: 3 (2022)
5. விராட் கோலி: 3 (2024)
அடுத்த ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்ததால் 15-3 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த திலக் வர்மா 20 (20) ரன்களில் அவுட்டானார்.
இந்தியா போராட்டம்:
அதே போல மறுபுறம் கொஞ்சம் அதிரடியாக விளையாட முயற்சித்த அக்சர் பட்டேல் 27 (21) ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி ஏமாற்றுத்துடன் சென்றார். அதற்கடுத்ததாக வந்த ரிங்கு சிங் 9 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். இறுதியில் ஹர்திக் பாண்டியா நான் நிதானமாக விளையாடி இந்தியாவை ஆல் அவுட்டாக விடாமல் 39* (45) ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: முதல்ல ஷாருக்கான் யாருன்னே தெரியாது.. அவர மாதிரி மனுஷன் தான் இதுக்கு கரெக்ட்.. பட் கமின்ஸ் பேட்டி
அவருடன் அர்ஷ்தீப் 7* ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா போராடி 124-6 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு கேப்டன் மார்க்ரம், கோட்சி, யான்சென், பீட்டர், ஆண்டிலே தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அந்த வகையில் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருக்கும் இந்த மைதானத்தில் இந்தியா போராடி 124 ரன்கள் எடுத்துள்ளது. அதே போல பந்து வீச்சிலும் இந்தியா போராடி வெல்லுமா என்ற எதிர்பார்ப்புரசிகர்களிடம் காணப்படுகிறது.



