இந்தியாவில் பாலிவுட் வட்டாரத்தில் ஷாருக்கான் உச்சபட்ச நட்சத்திர நடிகராக ஜொலித்து வருகிறார். அதனால் இந்தியாவில் அவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். தம்முடைய நடிப்பு திறமையால் பல கோடிகளையும் சம்பாதித்துள்ள அவர் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனும் அணியை நடத்தி வருகிறார். அந்த அணியில் முதல் முறையாக 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பட் கமின்ஸ் விளையாடினார்.
பின்னர் தனது அனுபவத்தால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வென்றார். அதன் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஹைதராபாத் அணியின் கேப்டனாக 20.50 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட பட் கமின்ஸ் ஹைதராபாத் அணி ஃபைனல் வரை அழைத்துச் சென்றார்.
யாருன்னு தெரியாது:
இருப்பினும் ஃபைனலில் கொல்கத்தா அணியிடம் ஹைதராபாத் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு முதல் முறையாக ஷாருக்கானை பார்த்த போது அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ஐபிஎல் அணிக்கு ஷாருக்கான் போன்றவர் உரிமையாளராக இருப்பது சிறந்த விஷயம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
அதற்கான காரணங்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் கமின்ஸ் தெரிவித்தது பின்வருமாறு. “இப்படி சொல்வது எனக்கு சிரமத்தை கொடுக்கலாம். ஆனால் ஷாருக்கான் முதல் முறையாக பார்த்த போது அவர் யார் என்ற ஐடியா எனக்கு இல்லை. அந்த சமயத்தில் 18 – 19 வயதில் இருந்த நான் பாலிவுட் படங்களை பார்த்ததில்லை. அந்த சூழ்நிலையில் நேரில் பார்த்த போது அவர் நட்சத்திரம் என்று என்னிடம் சொன்னார்கள்”
சிறந்த ஓனர்:
“அவரைச் சுற்றி பாதுகாவலர்கள் இருந்தார்கள். மற்ற இளம் இந்திய வீரர்கள் அவரிடம் பேசுவதற்கு தயங்கினார்கள். அதனால் அவர் ஸ்பெஷல் மிகுந்தவராக இருப்பார் என்று நான் நினைத்தேன். ஒரு அணியின் கேப்டனாக இவரை விட சிறந்த உரிமையாளரை நீங்கள் கேட்க முடியாது. ஏனெனில் அவர் வீரர்களான எங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் சுந்தரமாக விளையாடுங்கள் என்றே சொல்வார்”
இதையும் படிங்க: பட் கமின்ஸ் மாதிரி.. ஜஸ்ப்ரித் பும்ரா தான் இந்திய அணியில் இதை செய்ய கரெக்ட்.. ரிக்கி பாண்டிங் பேட்டி
“ஆனால் மற்ற ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை போடுவார்கள். ஆனால் ஷாருக்கான் அணி மற்றும் வீரர்களிடமிருந்து அழுத்தத்தை எடுக்க முயற்சிப்பது சிறந்த விஷயமாகும்” என்று கூறினார். அந்த வகையில் சாருக்கான் உரிமையாளராக இருக்கும் கொல்கத்தா அணி மூன்று கோப்பைகளை வென்று இரண்டாவது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



