என்னை பொறுத்தவரை யாரும் தோனி மாதிரி இருக்க முடியாது. என் கேப்டன்சி இப்படித்தான் இருக்கும் – சஞ்சு சாம்சன் அதிரடி

samson

சென்ற ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய மோசமான தொடராக அமைந்துவிட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடைசி இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடரை முடித்துக் கொண்டது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை இந்த ஆண்டு அதைத்தான் ராயல்ஸ் அணியில் தனது அணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றி விட்டது.

Smith

தற்பொழுது சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக களமிறக்க உள்ளது. மேலும் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக சிறந்த மற்றும் சிறப்பான வீரர்களை தேர்ந்தெடுத்ததாக கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் கூறப்பட்டு வந்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் மோரிசை 16.25 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது. இந்த ஆண்டு நடந்து முடிந்த இடத்தில் மிகப் பெரிய விலைக்கு போன வீரரும் அவரை ஆவார்.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிவம் துபே, லிவிங்ஸ்டன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற வீரர்களை ஏலத்தில் வாங்கியது. மேலும் அணியில் ஏற்கனவே ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தாண்டு ராஜஸ்தான் அணிக்கான புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Samson

சஞ்சு சாம்சனையும் மகேந்திர சிங் தோனியையும் சில நாட்களுக்கு முன்பாக ஒப்பீட்டு சில கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது பேசியுள்ள சஞ்சு சாம்சன், தோனி ஒரு மிக சிறந்த கேப்டன் ஆவார். தோனி எப்போதும் தோனிதான், அவரது முடிவுகள் மற்றும் அவரது கேப்டன்சி மிக தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

- Advertisement -

Samson

எனவே என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம். நான் சஞ்சு சாம்சன் ஆக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மேலும் கேப்டனாக இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிக சிறப்பான விதத்தில் தலைமை தாங்க போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச்சிறந்த வகையில் இந்த ஆண்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், நிச்சயம் இது இந்த ஆண்டு சிறப்பாக நாங்கள் விளையாட கைகொடுக்கும் என்றும் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.