- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடைசி 2 போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது.. காரணம் இதுதான் – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த ஓராண்டாகவே டி20 கிரிக்கெட் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்குள் துணை கேப்டனாக வந்ததோடு சேர்த்து துவக்க வீரராகவும் களமிறங்குவதால் அவரது இடம் இந்திய அணியில் பறிபோனது. அப்படி துவக்க வீரருக்கான இடத்தினை இழந்த சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார்.

கடைசி 2 போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு ஏற்படவிருக்கும் ஏமாற்றம் :

ஆனால் துவக்க வீரராக சிறப்பாக விளையாடும் அளவிற்கு சஞ்சு சாம்சனால் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இதன் காரணமாக அவரது ஆட்டம் மீது விமர்சனங்களும் எழுந்தன. அதோடு சுப்மன் கில்லை மூன்றாவது இடத்திற்கு தள்ளி துவக்க வீரருக்கான இடத்தில் சஞ்சு சாம்சனை விளையாட வைக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்களும் இருந்து வந்தன.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணியின் நிர்வாகம் சுப்மன் கில்லை தொடர்ச்சியாக துவக்க வீரராக களமிறக்கி வருகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஆர்டர் நிலையற்று காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது மீண்டும் டாப் ஆர்டரில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் அதனை பயன்படுத்த தவறி விட்டார்.

அதனால் ஒரே போட்டியில் சொதப்பியதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது விக்கெட் கீப்பருக்கான வாய்ப்பு ஜிதேஷ் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான எஞ்சியுள்ள கடைசி 2 போட்டிகளிலும் ஜிதேஷ் சர்மா தான் விளையாடுவார் என்றும் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியின் போது ஃபினிஷராக ஏழாவது இடத்தில் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 13 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இப்படி ஃபினிஷர் ரோலில் மிகச் சிறப்பாக செயல்படும் ஜிதேஷ் சர்மாவை தான் இந்திய அணி ஆதரிக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : நான்காவது டி20 போட்டியில் வரலாறு படைக்க காத்திருக்கும் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா – விவரம் இதோ

ஏற்கனவே டி20 போட்டிகளின் துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை துவக்க வீரருக்கான இடத்திலிருந்து நீக்க மாட்டார்கள் என்பதால் ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் சஞ்சு சாம்சனை விட பினிஷராக களமிறங்கி போட்டிகளை முடித்துக் கொடுக்கும் ஜிதேஷ் சர்மாவிற்கே அதிக வாய்ப்புகளை இந்திய அணி வழங்கும் என்று தெரிகிறது.

- Advertisement -