இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
சஞ்சு சாம்சன் நிகழ்த்திய மோசமான சாதனை :
இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு போட்டிகள் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டிகளாக மாறியுள்ளன. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 3 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் மார்க்கோ யான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரராக ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக முதல் டி20 போட்டியில் அவர் 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதோடு அதற்கு முன்னதாக விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரின் இறுதிப்போட்டியிலும் சதம் அடித்திருந்தார்.
இப்படி அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியிருந்த சஞ்சு சாம்சன் நடைபெற்று முடிந்த இந்த மூன்றாவது போட்டியிலும் ஹாட்ரிக் சதம் அடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் இந்த மூன்றாவது போட்டியில் தான் சந்தித்த மூன்றாவது பந்தியிலேயே அவர் டக் அவுட்டாகி ஆட்டமிழந்திருந்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த நடப்பு 2024-ஆம் ஆண்டு மட்டும் நான்காவது முறையாக அவர் டக் அவுட்டாகியுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக முறை டி20 போட்டிகளில் டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளி சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித்துக்கு பதில் இவர்தான் ஓப்பனர்.. இவர்தான் கேப்டன்.. தெளிவாக கூறிவிட்டு கிளம்பிய – கவுதம் கம்பீர்
ரோகித் சர்மா கடந்த 2018-ஆம் ஆண்டிலும், விராட் கோலி நடப்பு 2024-ஆம் ஆண்டும் மூன்று முறை டக் அவுட்டாகி அதிக முறை ஒரே ஆண்டில் டக் அவுட்டான இந்திய வீரர்கள் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தி இருந்தனர். அதனை தற்போது சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



