ரோஹித்துக்கு பதில் இவர்தான் ஓப்பனர்.. இவர்தான் கேப்டன்.. தெளிவாக கூறிவிட்டு கிளம்பிய – கவுதம் கம்பீர்

Gambhir
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த பிறகு தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த தொடரில் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

ரோஹித் சர்மாவிற்கு பதில் இவர்தான் கேப்டன் :

எதிர்வரும் நவம்பர் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கும் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நவம்பர் 10-ஆம் தேதியான நேற்று இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

ஒருவேளை அப்படி ரோகித் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வியும் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கௌதம் கம்பீர் பல்வேறு தெளிவான தகவல்களை பகிர்ந்து விட்டு ஆஸ்திரேலியா புறப்பட்டார். அந்த வகையில் கம்பீர் கூறியதாவது :

தற்போது வரை ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவாரா? இல்லையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் முதல் போட்டியில் விளையாடுவார் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா இல்லை என்றால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சில முக்கிய முடிவுகளை நாங்கள் எடுப்போம்.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் ஏற்கனவே கே.எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். பிளேயிங் லெவனுக்கு எது சிறப்பான ஆப்சனாக இருக்குமோ அந்த வகையில் துவக்க வீரருக்கான தேர்வு அமையும். நிச்சயம் ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவர் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கெதிரான இந்த போட்டியில் நாங்க ஜெயிக்க காரணமவே இவங்கதான் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

அதே போன்று தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள பும்ரா ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியின் கேப்டனாக அந்த முதல் டெஸ்ட் போட்டியில் செயல்படுவார் என இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெளிவாக எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement