இந்திய அணிக்கெதிரான இந்த போட்டியில் நாங்க ஜெயிக்க காரணமவே இவங்கதான் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

Markram
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியானது முதல் போட்டியில் இந்திய அணியிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்துள்ளது.

இந்திய அணிக்கெதிரான வெற்றிக்கு காரணம் இதுதான் :

அதன்படி நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அந்த அணி 19 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்கம் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தோம். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் சரியான திட்டங்களை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

பேட்டிங்கை பொறுத்த வரை நாங்கள் இன்னும் வலுவாக சேசிங் செய்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் சேசிங் செய்வது சற்று சவாலாக இருந்தது. இருந்தாலும் ஸ்டப்ஸ் மிகச் சிறப்பாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். அதேபோன்று கோட்சே மிகச் சிறப்பாக அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.

இதையும் படிங்க : நாங்க தோத்தாலும் வருண் சக்கரவர்த்தி செய்ஞ்ச இந்த விஷயத்தை பாத்து அசந்துட்டோம் – சூரியகுமார் யாதவ்

உண்மையிலேயே இது போன்ற கடைசிநேர பார்ட்னர்ஷிப் எங்கள் அணிக்கு தேவையான ஒன்றுதான். பந்துவீச்சில் எங்களது அணி இந்த முறை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் இந்த தொடரை சமன் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி என மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement