- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணிக்காக எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18 ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்ச சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115 ரன்களையும், ஆயுஷ் மாத்ரே 59 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் முறியடிக்க சாதனை யாதெனில் : இதுவரை சிஎஸ்கே அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக அதிக ரன்கள் எடுத்த வீரராக தோனி 84 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : அவங்க என்மேல வச்ச நம்பிக்கைக்காக தான் இந்த சதம்.. சேப்பாக்கம் சதம் குறித்து – சஞ்சு சாம்சன் பேட்டி

கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக தோனி 84 ரன்கள் அடித்திருந்தார். இவ்வேளையில் தற்போது 2026 ஐ.பி.எல் அணியின் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் அடித்த 115 ரன்கள் மூலம் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனியிடம் இடம் இருந்து தட்டிப் பறித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -