46க்கு கீழே போய்டுச்சு.. சச்சின் மாதிரி திறமை இருந்தா இங்கிலாந்தில் காட்டுங்க.. கோலிக்கு மஞ்ரேக்கர் அறிவுரை

Sanjay Manjrekar
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நன்றாக விளையாடி முக்கிய பங்காற்றினர். சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக விளையாடிய அவர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேற முக்கிய காரணமானார்கள்.

அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று ஒரு தரப்பு இந்திய ரசிகர்களே விமர்சித்தனர். ஆனால் தற்போது சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதால் அடுத்ததாக ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் என்ன தான் ஒருநாள் போட்டிகளில் அசத்தினாலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 46ஆக குறைந்துள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சரிந்த மகத்துவம்:

எனவே சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக கருத்தப்படும் விராட் கோலி அடுத்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் விராட் கோலிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்”

“அது அவருடைய மரபை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி தற்போது 46. அது ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கான சராசரி கிடையாது. விராட் கோலி தாம் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் நினைவு கொள்வதை வெறுப்பார். ஏனெனில் ஒருநாள் போட்டிகள் தான் நீங்கள் உங்களுடைய பேட்டிங் திறனை சிறப்பாக வெளிப்படுத்த உதவும் கடைசி இடமாகும்”

- Advertisement -

டெஸ்ட் மணிமகுடம்:

“அப்படி பார்த்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் ஏராளமான ரன்கள் குவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 51 சதங்கள் அடித்துள்ளார். தற்போதைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகளின் மகத்துவம் பெரிதாக தெரியாது. உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளே ஒரு சிறந்த வீரர்களின் மணிமகுடமாக அமையும்”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் செஞ்சுரி அடிச்சப்போ விராட் கோலியின் ஷூவை தான் போட்டிருந்தேன் – நிதீஷ் ரெட்டி பகிர்ந்த சுவாரசிய தகவல்

“அங்கே தான் விராட் கோலி சரிந்துள்ளார். 2015, 2018இல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் அற்புதமாக விளையாடிய அவரால் 12 வருடங்கள் கடந்தும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் பலவீனத்தை சரி செய்ய முடியவில்லை. அது அவருடைய திறமையையும் மகத்துவத்தையும் பாழ் படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement