இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பினை பெற்றார். அந்த வகையில் இந்திய அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியும் உள்ளார்.
முதல் டெஸ்ட் செஞ்சுரி அடிச்சப்போ விராட் கோலி ஷூவை தான் போட்டிருந்தேன் : நிதீஷ் ரெட்டி
கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியுடன் பயணித்த அவருக்கு அந்த தொடரின் முதல் போட்டியிலேயே அறிமுக வாய்ப்பு கிடைத்தது. அதோடு அந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடிய அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட்டிங்கில் 298 ரன்களை அடித்ததோடு மட்டுமின்றி பந்துவீச்சில் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
அதிலும் குறிப்பாக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற போட்டியின் போது அசத்தலான சதம் ஒன்றிணையும் அவர் விளாசியிருந்தார். இந்நிலையில் தான் அந்த சதத்தினை அடிக்கும் போது விராட் கோலியின் ஷூவை தான் அணிந்து இருந்ததாக தற்போது பிரத்தேக பேட்டி ஒன்றில் சில தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் நிதீஷ் குமார் ரெட்டி கூறியதாவது :
மெல்போன் டெஸ்ட் போட்டியின் போது நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் விராட் கோலி ஓய்வறைக்குள் வந்த விராட் கோலி சர்ஃபராஸ் கானிடம் உங்களுடைய ஷூ சைஸ் என்ன? என்று கேட்டார். அதற்கு சர்பராஸ் கான் 9 என்று கூறினார். பின்னர் என்னிடம் திரும்பி உங்களுடைய ஷூ சைஸ் என்ன நிதீஷ்? என்று கேட்டார். நான் 10 என்று கூறினேன்.
உடனே அவர் வைத்திருந்த அவருடைய ஷூவை உனக்கு பிடித்தால் எடுத்துக்கொள் என என்னிடம் கொடுத்தார். பின்னர் அந்த ஷூவை அணிந்து தான் நான் முதல் டெஸ்ட் சதம் அடித்திருந்தேன். விராட் கோலி கொடுத்த அந்த பரிசை என்னால் மறக்கவே முடியாது என நிதீஷ் ரெட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளுக்கு பிறகு ஓகே சொன்ன நிர்வாகம்.. ஐ.பி.எல் தொடருக்கு மீண்டும் வரும் பழைய ரூல் – பவுலர்களுக்கு ஹேப்பி தான்
ஆஸ்திரேலிய தொடர் முடித்து நாடு திரும்பிய அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை தவறவிட்டார். பின்னர் தற்போது எதிர்வரும் 2025 ஐ.பி.எல் தொடரில் அவர் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



