இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் மிகப் பிரபலமான கிரிக்கெட் தொடராக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் சுவாரசியத்திற்கு ஏற்ப அவ்வப்போது சில விதிமுறை மாற்றங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வந்த வேளையில் சில விதிமுறைகள் தடை செய்யப்பட்டும் இருக்கின்றன.
5 ஆண்டுகளுக்கு பிறகு தடையை நீக்கிய நிர்வாகம் :
அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த வேளையில் பந்துவீச்சாளர்கள் பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கக்கூடாது என்று தடையை ஐபிஎல் நிர்வாகம் விதித்திருந்தது. ஏனெனில் எச்சில் மூலமாக கொரோனா பாதிப்பு வீரர்களுக்கு ஏற்படும் என்ற கருத்தை முன்வைத்து அந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
பந்தில் எச்சிலை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என்ற நிலை வந்து விட்டதால் மீண்டும் பந்தை பளபளப்பாக பந்துவீச்சாளர்கள் எச்சிலை பயன்படுத்த பிசிசிஐ அனுமதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல்வேறு முன்னணி பந்துவீச்சாளர்கள் பந்தில் எச்சிலை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.
இவ்வேளையில் தற்போது மும்பையில் அனைத்து அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்த தடையை பி.சி.சி.ஐ நீக்கிள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பந்துவீச்சாளர்கள் பந்தில் எச்சிலை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்து ஓரளவுக்கு பழையதாக மாறிய பின்னர் ஸ்விங் நின்றுவிடும்.
இதையும் படிங்க : 43 வயசானாலும் உலகிலேயே அதுல தோனி பெஸ்ட்.. ஓய்வானாலும் 4 வருசம் ஆடுனாலும் ஆச்சர்யமில்ல.. உத்தப்பா
அதனால் எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்குவதன் மூலம் ஓரளவு ஸ்விங்கை பெறலாம் என்பதற்காகவே பந்துவீச்சாளர்கள் இந்த விதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் மீண்டும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தடையை பி.சி.சி.ஐ நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



