கிரிக்கெட்டில் இந்த ரெண்டு ரூல்ஸ் தேவையில்லாத ஒன்னு. அப்புறம் எதுக்கு அம்பயர் – சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி

Sanjay

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஃப்ரீ ஹிட் மற்றும் லெக் பை ஆகிய இரண்டு விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதமாக இருக்கிறதென்றும், அந்த விதிமுறைகள் பந்து வீச்சாளர்களுக்கு முற்றிலும் எதிராக இருப்பதால் அந்த விதிமுறைகளை கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று தனது சொந்த கருத்தை கூறியிருக்கிறார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த விதமுறைகளை குறித்து ஒரு தனியார் நாளிதிழக்கு எழுதியுள்ள கட்டுரையில், ஃப்ரீ ஹிட் விதிமுறையை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த கட்டுரையில்,

Umpire

கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களை அதிகமாக வெறுக்கும் ஒரு நபர்தான், இந்த ஃப்ரீ ஹிட் விதிமுறையைக் கொண்டு வந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஒரு பந்து வீச்சாளர் நோ பால் வீசி விட்டால் அதற்கு அபராதமாக ஒரு ரன் விதிக்கப்படுகிறது. இப்படியிருக்கையில் அதற்கடுத்த பந்தில் பேட்ஸ்மேன் அவுட்டானாலும் அவர் அவுட் இல்லை என்ற இந்த ஃபரீ ஹிட் விதிமுறையானது முழுக்க முழுக்க பந்து வீச்சாளர்களுக்கு எதிரான, நியாயமே இல்லாத ஒரு விதிமுறையாகத் தான் கருதப்பட வேண்டும்.

- Advertisement -

மேலும் தற்போது நோ பாலை கவனிக்கும் பொறுப்பும் மூன்றாவது நடுவரிடம் இருக்கிறது. இந்த விதி முறையால் பந்து வீச்சாளர்கள் வரையறுக்கப்பட்ட கோட்டை தாண்டி சில சென்டி மீட்டர்கள் காலடி வைத்து விட்டாலே அதற்கு நோபால் வழங்கி விடுகின்றனர். பந்து வீச்சாளர் செய்த தவறுக்காக அடுத்த பந்தில் அவருக்கு தண்டனை வழங்கும் இந்த விதிமுறையானது முற்றிலும் தவறான ஒன்றாகும் என்று கூறிய அவர்,

Umpire

லெக் பை விதிமுறையைப் பற்றியும் விமர்ச்சித்திருக்கிறார். அது பற்றி எழுதியுள்ள அவர், பேட்ஸ்மேன்கள் ஆடுவதற்கு கடினமான பந்துகளை பந்து வீச்சாளர்கள் வீசும் போது, அந்த பந்தானது பேட்ஸ்மேனின் கால் காப்பில் பட்டு பவுண்டரிக்கு செல்வதையும், அதற்காக கள நடுவர் நான்கு ரன்களை வழங்குவதையும் நாம் நிறைய முறை பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

Umpire

இப்படி தனது திறமையால் பேட்ஸ்மேனுக்கு ஒரு கடினமான பந்தை வீசிய பிறகும்கூட அந்த பந்து வீச்சாளர்தான் நஷ்டமடைகிறார், மீண்டும் பேட்ஸ்மேன் லாபமடைகிறார். இப்படிப்பட்ட விதிமுறையை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், அது அறிவிலித்தனமாகத்தான் தெரியும் என்றும் அவர் அந்த கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

Advertisement