இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்தார். அதற்கடுத்தப் போட்டியில் 430 ரன்களை குவித்த அவர் பல சாதனைகளை புரிந்து இந்தியாவை 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதனால் 3வது போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அரை சதம் கூட அடிக்காதது இந்தியாவின் வெற்றிக்கு உதவவில்லை. இந்நிலையில் 3வது போட்டியில் ஜாக் கிராவ்லியிடம் கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதம் செய்தது அவருடைய பேட்டிங்கை பாதித்ததாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி போல களத்தில் கில் ஆக்ரோஷமாக செயல்பட முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
போலியான ஸ்டைல்:
எனவே மற்றவர்களைப் போல போலியாக அல்லாமல் சுப்மன் கில் தமக்கென்று தனியாக கேப்டன்ஷிப் ஸ்டைலை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சுடப்படும் போது இன்னும் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டுள்ளார். ஆனால் சுப்மன் கில் பொறுத்த வரை அவர் எந்த வழியில் செல்கிறார் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்”
“ஏனெனில் எதிரணிகள் மோதும் போது சுப்மன் கில் பேட்டிங்கில் பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிகிறது. ஒருவேளை சுப்மன் கில்லிடம் நெருப்பைப் போல எதிரணிகளிடம் மோதும் குணம் இருந்தால் அது முன்னதாகவே வெளிப்பட்டிருக்கும். கேப்டனாக வந்த பின் நீங்கள் அதை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அல்லது தற்போது கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியை வென்று நிறைய ரன்கள் குவித்த நம்பிக்கையால் அவர் அதைக் காண்பிக்கிறாரா?”
மஞ்ரேக்கர் அட்வைஸ்:
“இப்படி சொல்வதற்கான காரணம் என்னவெனில் விராட் கோலி கேப்டனாக வருவதற்கு முன்பாகவே எதிரணிகளிடம் ஆக்ரோஷத்தைக் காண்பித்தார். ஆனால் சுப்மன் கில்லிடம் தற்போது நாம் பார்க்கும் ஆக்ரோசத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. அடுத்ததாக 8 நாட்கள் கழித்து விளையாட வரும் அவருக்கு அடுத்தப் போட்டி கச்சிதமானதாக இருக்கும்”
இதையும் படிங்க: முக்கிய வேலையில் கோட்டை விடும் ஜடேஜாவை நீக்கிட்டு.. இந்தியா அவரை சேர்க்கனும்.. மொய்ன் அலி அதிரடி
“அந்தப் போட்டியில் சுப்மன் கில் நாம் விராட் கோலியா அல்லது தோனியா அல்லது அவர்களுடைய குணத்திற்கிடையே இருக்கும் நபரா? என்பதைக் கண்டறிய வேண்டும். என்னைக் கேட்டால் அவர் தன்னுடைய சொந்த வழியைக் கண்டறிய வேண்டும். அந்த வழி எதுவாக இருந்தாலும் அது அவருடைய தலைமைப் பண்புகளை மேம்படுத்தி, அவரை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்ற வேண்டும்” என்று கூறினார்.



