முக்கிய வேலையில் கோட்டை விடும் ஜடேஜாவை நீக்கிட்டு.. இந்தியா அவரை சேர்க்கனும்.. மொய்ன் அலி அதிரடி

Moeen Ali
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்குகிறது. மான்செஸ்டரில் நடைபெறும் அந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப 5 பவுலர்களுடன் விளையாடுவது அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் துறையில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆனால் முக்கியமான பந்து வீச்சில் ஜடேஜா மிகவும் சுமாராக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சுமாரான பவுலிங்:

அதனால் பேட்டிங்கில் ஜடேஜாவின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவார் என்று மொய்ன் அலி தெரிவித்துள்ளார். எனவே 4வது போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் வேறு வழியின்றி ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இந்த அதிரடியான ஆலோசனைப் பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவுக்கு தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியும்”

“இதை அவர் நீண்ட காலமாக செய்து வருகிறார். இந்தக் குறிப்பிட்ட தொடரில் பேட்டிங் துறையில் அற்புதமாக செயல்படும் அவர் பந்து வீச்சில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. மிகவும் நெருக்கமாக பந்து வீசும் அவர் சிறப்பாக பந்து வீசவில்லை. பேட்டிங் துறையில் அவர் தன்னுடைய கேரியரில் உச்சகட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் பவுலிங் துறையில் அவர் விக்கெட்டுகள் எடுப்பதில்லை”

- Advertisement -

அதிரடி ஆலோசனை:

“அவர் சிறப்பாக பவுலிங் செய்தும் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதன் காரணமாக குல்தீப் யாதவ் இந்திய அணியில் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். ஆனால் யாருக்கு பதிலாக அவர் விளையாட வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. சுந்தர் நன்றாக பவுலிங் செய்கிறார், ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்கிறார்”

இதையும் படிங்க: எப்படின்னு தெரியல.. இந்தியா 4வது போட்டியில் ஜெய்க்க.. அந்த பவுலரை ஆட வைங்க.. மைக்கேல் கிளார்க் கோரிக்கை

“அதனாலேயே குல்தீப்பை அணிக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் குல்தீப் இந்திய அணியில் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். இருப்பினும் அவர் இந்திய அணியில் பொருந்துவாரா என்று எனக்குத் தெரியவில்லை” என கூறினார். முன்னதாக கடைசி 4 இன்னிங்ஸில் ஜடேஜா அரை சதமடித்துள்ளதால் நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.

Advertisement