இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2 – 1* (3) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்குகிறது. மான்செஸ்டர் நகரில் நடைபெறும் அந்தப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் ஓரிரு மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இங்கிலாந்தில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி 5 முழுமையான பவுலர்களுடன் விளையாடுவது அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை இந்தியாவின் வெற்றிக்கு குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் விக்கெட் டேக்கரான குல்தீப் இங்கிலாந்தை விரைவாக அவுட்டாக்க உதவுவார் என்று அவர் கூறியுள்ளார்.
எப்படியாச்சும் ஆட வைங்க:
அதற்காக இந்திய அணியில் யாரை நீக்க வேண்டும்? என்பது தமக்கே புரியவில்லை என்றும் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். ஏனெனில் ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோரும் நன்றாக விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “3வது போட்டியில் விளையாடிய விதத்திற்கு இந்தியா தங்களுடைய தலையை பெருமையுடன் நிமிர்த்தலாம்”
“குறிப்பாக ஜடேஜா சிறப்பாக விளையாடினார். ஆனால் ஏற்கனவே நான் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் எப்படியாவது விளையாட வேண்டும் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். அவரைக் கொண்டு வாருங்கள். ஆனால் எப்படி என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பவுலிங் செய்து கணிசமான ரன்கள் குவித்தார்”
கிளார்க் கோரிக்கை:
“அதே போல ஜடேஜா அபாரமாக பேட்டிங் செய்தார். கடந்தக் காலங்களில் நிறைய போட்டிகளில் அவர் இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். கடந்தப் போட்டியில் எதிர்ப்புறம் யாராவது விக்கெட்டை விடாமல் விளையாடிருந்தால் ஜடேஜா ஜடேஜா இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார். ஆனால் போராடித் தோல்வியை சந்தித்த அவருக்காகவும் இந்தியாவுக்காகவும் நான் வருந்தினேன்”
இதையும் படிங்க: கம்பீர் செய்த இந்த தவறுதான் இங்கிலாந்தில் இந்தியா தடுமாற காரணம்.. சுட்டிக்காட்டிய – ரஹானே
“அது போன்ற போட்டிகள் உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும்” என்று கூறினார். இருப்பினும் ஜடேஜா, சுந்தர் ஆகியோர் இருப்பதால் குல்தீப் யாதவ் அணிக்குள் வருவது கடினமாகும். அதற்கு ஜடேஜா, சுந்தர் ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டும். அல்லது நித்திஷ் ரெட்டியை நீக்கி விட்டு இந்தியா 3 ஸ்பின்னர்களுடன் விளையாடும் முடிவை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



