கம்பீர் செய்த இந்த தவறுதான் இங்கிலாந்தில் இந்தியா தடுமாற காரணம்.. சுட்டிக்காட்டிய – ரஹானே

Rahane and Gambhir
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

கம்பீரின் பாசம் எனக்கு புரியுது.. ஆனா அது தப்பு : அஜின்க்யா ரஹானே

ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியை இழந்திருந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்த வேளையில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று (2-1) முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லார்ட்ஸ் மைதானத்தில் அடைந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. அதனால் எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. எனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும்.

இல்லையெனில் இங்கிலாந்து அணியிடம் தொடரை இழக்க நேரிடும். இந்நிலையில் இந்திய அணி இந்த இங்கிலாந்து தொடரில் தடுமாற என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து மண்ணில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வெளிப்படையான ரகசியம் தான்.

- Advertisement -

லார்ட்ஸ் மைதானத்திலும் இந்திய அணி தடுமாற அதுவே காரணம். அதேவேளையில் இங்கிலாந்து அணியின் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று இந்திய அணி செய்யும் மிகப்பெரிய தவறு யாதெனில் : இங்கிலாந்து மைதானங்களில் முறையான பவுலர்களுடன் விளையாட வேண்டும். கௌதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன்.

இதையும் படிங்க : அவர் மட்டும் டீம்ல ஆடியிருந்தா இந்நேரம் 3-0ன்னு இந்தியா ஜெயிச்சிருக்கும் – பரூக் இன்ஜினியர் கருத்து

ஆனால் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இங்கு தேவையில்லை. இவர்களில் யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை சேர்க்க அவர் நிச்சயம் ஆலோசித்தாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் குல்தீப் யாதவின் தேவை அதிகமாக இருப்பதாக தான் கருதுவதாக அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement