டெஸ்ட் ஒப்பனராக இவரை களமிறக்குங்கள். விக்கெட் விழவே விழாது – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே துவங்கியுள்ளது.

indvsaus

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244-10 பெற்றது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191-10 எடுத்திருந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்தது. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷாவை அணியிலிருந்து நீக்குமாறு பலரும் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, 2வது டெஸ்ட் போட்டியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

pujara 2

அந்த வகையில், இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் “ நான் மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாடினேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். அவ்வாறு களமிறங்கினால் இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கணிக்க முடியும்.

Pujara-1

புஜாரா நீண்ட நேரம் விக்கெட் இழக்காமல் நிலைத்து விளையாடக் கூடியவர். அதேபோல் தனது விக்கெட்டை விரைவில் இழக்க மாட்டார்” என்று தனது ட்விட்டர் மூலம் இந்திய அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement