ஒரு மேட்ச் அதிசயம்ன்னு நிரூபிக்காம ரிஷப் பண்ட்டை ஃபாலோ பண்ணனும்.. கேஎல் ராகுல் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அந்தப் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்கள் அடித்த இந்தியா பேட்டிங் துறையில் முழு மூச்சுடன் வெற்றிக்குப் போராடியது.

இருப்பினும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதும் 7 கேட்ச்களை தவற விட்டதும் தோல்வியைக் கொடுத்தது. அதன் காரணமாக 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்துப் போராடிய ரிஷப் பண்ட் போராட்டம் வீணானது. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் மோசமாக விளையாடிய அவரை ஜாம்பவன் கவாஸ்கர் நேரலையில் ஸ்டுப்பிட் என்று விமர்சித்தார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் அசத்தல்:

அதற்கு பதிலடியாக இத்தொடரின் முதல் போட்டியிலேயே 134 ரன்கள் அடித்த ரிஷப் பண்ட் 2வது இன்னிங்சில் 218 ரன்கள் அடித்து அட்டகாசமாக சாதனைகளைப் படைத்தார். அதே போல 42 ரன்கள் அடித்த ராகுல் 2வது இன்னிங்சில் சதத்தை அடித்து அசத்தினார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் மிகவும் சிறப்பாக விளையாடுவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

ஆனால் கேஎல் ராகுல் கடந்தக் காலங்களிலும் முதல் போட்டியில் பெரிய ரன்கள் அடித்த போதிலும் எஞ்சிய போட்டிகளில் சுமாராக செயல்பட்டதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே முதல் போட்டியில் மட்டும் ராகுல் அதிசயமாக செயல்படாமல் அடுத்து வரும் போட்டிகளிலும் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சஞ்சய் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அதிசயம் வேண்டாம்:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். ஒரே போட்டியில் 2 சதங்கள் அடிக்கும் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் உடலளவிலும் மனதளவிலும் நிறைய அம்சங்கள் தேவைப்படும். ஒரு சதத்தை அடித்த அடுத்த 48 மணி நேரத்திற்குள் மற்றொரு சதத்தை அடிக்க அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். அதை செய்தால் நீங்கள் ஒரு தரமான வீரருக்கான முத்திரையாக இருப்பீர்கள்”

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு ஓய்வை அறிவித்தது ஏன்? – மனம்திறந்த விராட் கோலி

“ரிஷப் பண்ட் சமீப காலங்களில் பெரிய ரன்கள் அடிக்காததால் பசியுடன் இருக்கிறார். எனவே ஃபார்மை 3 எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இங்கே மற்றொரு சீனியர் பேட்ஸ்மேன் இருக்கிறார். தற்போது ஃபார்மை தொடர் முழுவதும் வைத்திருப்பதைத் தவிர்த்து அவருக்கு வேறு வழியில்லை. இந்திய அணிக்கு அவர் அவசியமாக தேவைப்படுகிறார். கேஎல் ராகுல் எனப்படும் அவர் ஒற்றைப் போட்டியின் அதிசயமாக இருக்கக்கூடாது” என்று கூறினார்.

Advertisement