விராட் – ரோஹித் வீட்ல இருந்துருக்கனும்.. பரவால்ல கடைசியா பேட்டிங்ல இதை செஞ்சுட்டு போகட்டும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. இந்த தொடரில் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. முன்னதாக இந்த தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்களா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, கேஎல் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். எனவே அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன. இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

மஞ்ரேக்கர் வெறுப்பு:
மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா தலைமையில் 10 வெற்றிகளை பெற்ற இந்தியா ஃபைனல் வரை சென்றது. அதன் காரணமாக மீண்டும் இத்தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல டி20 கிரிக்கெட்டில் கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலியை இந்த உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் ஏகப்பட்ட அனுபவத்தையும் தரத்தையும் கொண்டிருப்பதால் மீண்டும் விராட் கோலி தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடாமல் வீட்டிலிருக்க வேண்டியவர்கள் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இருப்பினும் தேர்வாகியுள்ள அவர்கள் இத்தொடரில் துவக்க வீரர்கள் களமிறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக நான் இந்த வழியில் சென்றிருக்க மாட்டேன். கொஞ்சம் இளம் வீரர்களை அதிகமாக தேர்வு செய்திருப்பேன். ஆனால் தேர்வுக்குழு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதில் விராட் கோலி 3வது இடத்தில் விளையாடுவதற்கு கிட்டதட்ட சாத்தியமில்லை. ஏனெனில் அங்கே விளையாடினால் விராட் கோலியின் முழுமையான ஆட்டத்தை உங்களால் பெற முடியாது”

இதையும் படிங்க: வெளிநாட்டவர்களை விட கம்பீரிடம் அது அதிகமா இருக்கு.. இந்திய அணியை நெருப்பா மாத்திடுவாரு.. டிகே ஆதரவு

“ரோகித் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். எனவே இந்தியா தற்போது விராட் – கோலி என்ற 2 வலது கை பேட்ஸ்மேன்களை ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர வேண்டியுள்ளது. நானாக இருந்தால் முழுவதுமாக வித்தியாசமான புதிய அணியை கொண்டு வந்திருப்பேன். ஆனால் கடந்த பல வருடங்களாக வேலைக்காகாத சீனியர்களை மீண்டும் இந்தியா நம்பியுள்ளது. இம்முறையாவது அது வேலை செய்யும் என்று நம்புவோம்” எனக் கூறினார்.

Advertisement