KXIP vs RR : தப்பை ஒற்றுக்கொண்டால் மட்டுமே சிறப்பாக ஆடமுடியும் ரஹானேவை விளாசிய – மஞ்சரேக்கர்

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான்

Sanjay
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Rahane1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 52 ரன்களும், மில்லர் 27 பந்துகளில் 40 ரன்களையும் அடித்தனர். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திரிபாதி 50 ரன்களும், பின்னி 11 பந்துகளில் 33 ரன்களையும் அடித்தனர். சிறப்பாக விளையாடிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

rahane

இந்த போட்டியில் ரஹானேவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது : ரஹானேவின் பேட்டிங் பார்ம் மிகவும் மோசமாக உள்ளது அவர் அதனை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகே அவரால் தவறினை சரிசெய்துகொள்ள முடியும் என்று நேரடியாக சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

நேற்றைய போட்டியில் 21 பந்துகளை சந்தித்த ரஹானே 26 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹானே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டிகள் மட்டுமின்றி இந்திய அணியிலும் சொதப்பி வந்ததால் அவர் இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், தற்போது டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிவரும் ரஹானே 34 ரன்கள் மட்டுமே கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement