மீண்டும் ஜடேஜாவை வம்பிற்கு இழுத்து புண்ணாக்கி கொண்ட சஞ்சய் மஞ்சரேக்கர் – விவரம் இதோ

Sanjay
- Advertisement -

வர்ணனையாளராக இருந்து வந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பல சர்ச்சையான கருத்துக்களை கூறி இந்த வருட ஐ..பி.எல் தொடரின் வர்ணனை செய்யம் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் அவர் எப்போதும் மும்பை வீரர்களைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பேச மாட்டார். அனைத்து திறமையும் மும்பை வீரர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பது போல் அவரது பேச்சுக்கள் எப்போதும் இருக்கும்.

Sanjay

- Advertisement -

கடந்த வருட உலகக் கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடேஜா போன்ற துண்டு துக்கடா வீரர்கள் எல்லாம் என் அணியில் சேர்க்க மாட்டேன் என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும் தனது சக வர்ணனையாளர்கள் பலருடன் சர்ச்சைக்குரிய விதத்தில் வாதம் செய்வது இவர் வாடிக்கையாக கொண்டவர். பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடன் இவர் முகம் சுளிக்கும் வகையில் ஒரு நாள் வாதம் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

அதன் பின்னர் ஐபிஎல் வர்ணனையில் இருந்தும் இந்திய அணி கலந்துகொள்ளும் போட்டிகளுக்கான அவர் வர்ணனை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார் தற்போதும் இப்படித்தான் வர்ணனையாளர் வேலை இல்லாமல் சுற்றித் திரிகிறார். இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ரவிந்திர ஜடேஜா போன்ற வீரரை டி20 அணிக்கு எடுக்கக்கூடாது. அவருக்கு பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என்று பதிவு செய்திருந்தார்.

Sanjay

இதனை பார்த்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நான் கண்டிப்பாக இதனை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று ட்வீட் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவிந்திர ஜடேஜா நேற்று 11 பந்துகளில் 33 ரன்கள் அடித்து சென்னை அணியை வெற்றிபெற வைத்தார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மும்பையை பற்றி மட்டும்தான் தெரியும். எப்போது பார்த்தாலும் மும்பை மும்பை மும்பை அது மட்டும் தான் அவர்களுக்கு தெரியுமா மும்பையை தாண்டி அவரை யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Advertisement