அஸ்வின் இல்லை.. ரோஹித் இல்லாமல் முதல் ஆஸி போட்டிக்கான சஞ்சய் மஞ்ரேக்கர் இந்திய பிளேயிங் லெவன்

Sanjay Manjrekar
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் 4 போட்டிகளை வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்பதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் விளையாடுவதற்காக தம்முடைய இந்திய பிளேயிங் லெவன் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் வெளியிட்டுள்ளார். அந்த அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் அபிமன்யு ஈஸ்வரனை துவக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். இரண்டாவது ஓப்பனிங் வீரராக ஜெய்ஸ்வாலை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

முதல் டெஸ்ட்:

3வது இடத்தில் விளையாட உள்ள சுப்மன் கில் பயிற்சியின் போது காயத்தை சந்தித்ததாக செய்திகள் காணப்படுகின்றன. எனவே அவருக்கு பதிலாக சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 80, 68 ரன்கள் குவித்து அசத்திய இளம் வீரர் துருவ் ஜுரேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 4வது இடத்தில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 5வது இடத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் அவருடைய அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.

6வது இடத்தில் சுமாரான ஃபார்மில் தவித்தாலும் கேஎல் ராகுலை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். 7, 8வது இடங்களில் நித்திஷ் ரெட்டி போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுக்காத சஞ்சய் மஞ்ரேக்கர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்துள்ளார். சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அந்த இருவருமே மிகச் சிறப்பாக விளையாடி அசத்தினார்கள்.

- Advertisement -

சஞ்சய் மஞ்ரேக்கர் லெவன்:

அதன் காரணமாக சஞ்சய் மஞ்ரேக்கர் இந்த வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார். இறுதியில் வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ் ஆகியோரை சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல காயத்தால் விளையாடாத முஹமது ஷமிக்கு பதிலாக ஆகாஷ் தீப் இடம் பிடித்துள்ளார். முதல் போட்டிக்கான சஞ்சய் மஞ்ரேக்கர் இந்திய பிளேயிங் லெவன்:

இதையும் படிங்க: 3 – 0 தோல்வி டேமேஜ் பண்ணிருக்கும்.. நடராஜன் வெச்சு செஞ்சதை ஆஸியும் மறக்கல.. லபுஸ்ஷேன் பேட்டி

அபிமன்யு ஈஸ்வரன், யசஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கீப்பர்), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), முகமத் சிராஜ், ஆகாஷ் தீப்

Advertisement