3 – 0 தோல்வி டேமேஜ் பண்ணிருக்கும்.. நடராஜன் வெச்சு செஞ்சதை ஆஸியும் மறக்கல.. லபுஸ்ஷேன் பேட்டி

Marnus Labuschange
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க 2024 – 25 பார்டர் கவாஸ்கர் – கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்திய அணி சரித்திரம் படைத்தது.

அதே போல இம்முறையும் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்திய அணி போராட உள்ளது. ஆனால் சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

தன்னம்பிக்கை டேமேஜ்:

மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல் போல இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த படுதோல்வியால் இந்திய அணியின் தன்னம்பிக்கை பாதித்திருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணியை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் அவர்கள் சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார்கள். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அவர்கள் என்னுடைய கேரியரில் பார்க்காத தோல்வியை சந்தித்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார்கள். 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது அவர்களுடைய தன்னம்பிக்கையை டேமேஜ் செய்திருக்கும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

இந்தியாவின் கம்பேக்:

“இருப்பினும் அவர்கள் உலகின் சிறந்த அணியாகவே இருக்கிறார்கள். எனவே அவர்களை நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. 2021 தொடரில் அது தான் நடைபெற்றது. அந்தத் தொடரில் நடராஜன், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடினார்கள். அவர்கள் தங்களுடைய முதன்மை வீரர்களை இழந்தார்கள்”

இதையும் படிங்க: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – விவரம் இதோ

“சுப்மன் கில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனாலும் புதுமுக வீரர்களை வைத்து அவர்கள் வெற்றி பெற்றார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. அப்போது ரகானே தலைமையில் இளம் வீரர்களை வைத்து விராட் கோலி இல்லாமல் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement