இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – விவரம் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் முனைப்புடன் காத்திருக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் :

அதே வேளையில் இந்திய அணிக்கு எதிராக கடந்த இரண்டு முறையும் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை பெர்த் நகரில் நடைபெற இருக்கிறது.

அதற்கடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அடிலெய்டு மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பிரிஸ்பேனிலும், நான்காவது டெஸ்ட் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை மெல்போர்ன் மைதானத்திலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை சிட்னியிலும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் இந்த தொடரை கண்டு களிக்கலாம். அதோடு ஆன்லைனில் இந்த தொடரை காண விரும்புவோர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த தொடரை கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புஜாராவின் இடத்தில் அந்த 2 பேரும் ஆஸியை அடிக்கனும்.. ஒருத்தர் அட்டாக் பண்ணனும்.. யுவி அட்வைஸ்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் மூன்றுக்கு பூஜ்யம் அல்லது நான்குக்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement